இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போரை தாம் நிறுத்தியதாக 25 ஆவது தடவையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போர் ஒரு அணு ஆயுத போராக மாற இருந்த தாகவும், போரின் போது ஐந்து விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் நேற்றும் டிரம்ப் கூறினார். போரை தொடர்ந்தால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய இயலாது என தாம் மிரட்டியதால் இந்தியாவும் பாகிஸ்தானும் பணிந்தன என்றும் டிரம்ப் கூறினார். கடந்த 73 நாட்களாக டிரம்ப் இப்படி கூறி வருவது குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ், நாட்டில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டால் கூட அதை பொருட்படுத்தாமல் மோடி வெளிநாட்டு பயணங்களை நடத்திக் கொண்டிருப்பதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது.