இந்தியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை மேம்பட்ட நிலையில் உள்ளதாக டிஆர்டிஒ தலைவர் டாக்டர் சமீர் வி காமத் தெரிவித்தார். உலகின் அதிவேக சூப்பர்சோனிக் ஏவுகணையான பிரம்மோஸ் ஏவுகணையின் தாக்குதல் வரம்பை அதிகரிக்கவும், அதனை அனைத்து விமானங்களிலும் பொருத்தக்கூடிய வகையில் சிறியதாக்குவதையும் பரிசீலித்து வருவதாக கூறினார். தற்போது பிரம்மோசை சுகோய் 30 விமானத்தில் மட்டுமே பொருத்த முடியும் என தெரிவித்தார். பிரம்மோஸ் என்.ஜி என்று பெயரிப்பட்டுள்ள ஏவுகணையை சிறிதாக்கினால் எந்த தளத்திலும் பொருத்த முடியும் என்று தெரிவித்தார்.இதையும் படியுங்கள் : அமைச்சர், அதிகாரிகளுக்கு தரவேண்டும் எனக் கூறி குவாரி உரிமையாளர்களிடம் பணம் வசூல் என புகார்.