வாக்குத் திருட்டு விவகாரத்தில் அணு குண்டை விட வலிமையான ஹைட்ரஜன் குண்டை கைவசம் வைத்திருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எச்சரித்தார். சிறப்பு வாக்காளர் திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு புகாரை முன்வைத்து பீகாரில் ராகுல் காந்தி நடத்திய பேரணி நேற்று நிறைவடைந்தது. அப்போது உரையாற்றிய அவர், அரசியலமைப்பை பாஜக கொலை செய்ய ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை என்றார். அதோடு, வாக்கு திருட்டு விவகாரத்தில் தம்மிடம் இருக்கும் ஹைட்ரஜன் குண்டை வீசிய பிறகு பிரதமர் மோடியால் பொதுவெளியில் நிச்சயம் தலைகாட்ட முடியாது என்றும் சவால் விடுத்தார்இதையும் படியுங்கள் : குருகிராமில் பல இடங்களில் மழைநீர் தேங்கியதன் எதிரொலி டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் ஸ்தம்பித்த போக்குவரத்து