ஜார்க்கண்ட் முதலமைச்சராக வரும் 28-ந் தேதி ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. மேலும், கடந்த முறை இருந்தது போல இந்த முறையும் கூட்டணியில் ஒவ்வொரு கட்சிகளுக்கும் அமைச்சரவையில் பங்கு கொடுக்க ஹேமந்த் சோரன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பதவியேற்பு விழாவிற்கு ராகுல்காந்தி, கார்கே, மு.க.ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் அனைத்து தலைவர்களையும் அழைக்கவும் ஜார்க்கண்ட் முத்தி மோர்ச்சா முடிவு செய்துள்ளது.