மேற்கு வங்க மநிலம் ஜல்பைகுரியில் பெய்த கடும் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியே வர முடியாமல் தவித்தனர். மேற்குவங்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. ஜல்பைகுரி மாவட்டத்தில் பெய்த மழையினால் டீஸ்டா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருகில் உள்ள சபடங்கா கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்து குளம் போல் காட்சியளித்தது.