தலைநகர் டெல்லியில் அதிகாலை முதல் இடி, மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. கடும் கோடை வெப்பத்தால் தவித்து வந்த டெல்லி மக்கள் வெப்பம் தணிந்ததால் மகிழ்ச்சியடைந்தனர். லஜ்பத் நகர், ஆர்.கே.புரம் மற்றும் துவாரகை உள்ளிட்ட பகுதிகளில், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். பிரகதி மைதான் பகுதியில் அதிகாலை 5.30 மணி முதல் 5.50 வரை மணிக்கு 78 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. மேலும் மழை நீடிக்க வாய்ப்பிருப்பதால் டெல்லிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரித்துள்ளது. மோசமான வானிலையால் டெல்லியில் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.