இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழையால் இதுவரை 37 பேர் உயிரிழந்த நிலையில் ஜூலை 7 ஆம் தேதி வரை கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக மலைப்பகுதி முழுவதும் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது. மேலும் மண்டி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 40பேர் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.