கிரிக்கெட் மட்டையை பிடிக்க தெரியாதவர், கிரிக்கெட் உலகத்தையே கட்டுப்படுத்துவதாக மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகனும், ஐசிசி தலைவருமான ஜெய் ஷாவை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். பீகாரின் பாகல்பூரில் பரப்புரை மேற்கொண்ட அவர், பிரதமர் மோடி மக்களுக்கான நிலத்தை எடுத்து, அதானி மற்றும் அம்பானிக்குக் கொடுப்பதாக குற்றச்சாட்டினார். விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் மற்றும் ஊழியர்களை அழிப்பதற்காகவே ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டதாக ராகுல் சாடினார்.