நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் சரக்கு மற்றும் சேவை வரி 1 லட்சத்து 87 ஆயிரம் கோடி ரூபாய் வசூலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசூலானது இரண்டாவது அதிகபட்ச ஜிஎஸ்டி வருவாய் என கூறப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் வசூலானதே இதுவரை அதிகபட்ச வருவாயாக உள்ளது. அதே சமயம், கடந்த ஆண்டு ஏப்ரலில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 035 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலானது. இதுவே இரண்டாவது அதிகபட்ச வருவாயாக இருந்த நிலையில், கடந்த அக்டோபரில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 346 கோடி ரூபாய் வசூலாகி அந்த இடத்தை பிடித்துள்ளது.