கடந்த ஜூன் மாதம் ஜிஎஸ்டி மூலம் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 597 கோடி (( 1,84,597)) வசூல் செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு வர்த்தகம் மூலம் கிடைக்கும் வருமானம் 4.6 சதவீதம் உயர்ந்து ஒரு லட்சத்து 38 ஆயிரம் கோடியாகவும், இறக்குமதியில் இருந்து வந்த ஜிஎஸ்டி வசூல் 11.4 சதவீதம் உயர்ந்து 46 ஆயிரத்து 690 கோடியாகவும் உள்ளது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது வசூல் இரு மடங்காகி உள்ளது. 2025 நிதியாண்டில் 22 லட்சத்து 8 ஆயிரம் கோடி (( ரூ.22.08 லட்சம் கோடி வசூல் )) வசூல் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.இதையும் படியுங்கள் : தெலங்கானா - ஹைதராபாத் அதிவேகமாக சென்ற கார் மின்கம்பத்தின் மீது மோதி விபத்து..!