மே மாதத்தின் ஜிஎஸ்டி வசூல் 2 லட்சம் கோடி ரூபாயை தாண்டியதாக, மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், உள்நாட்டு பரிமாற்றம் மூலம் கிடைக்கும் வருமானம் 13.7 சதவீதம் அதிகரித்து ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயும், இறக்குமதி மூலம் கிடைக்கும்.ஜிஎஸ்டி வருமானம் 25.2 சதவீதமும் அதிகரித்து 51 ஆயிரத்து 266 கோடி ரூபாயும் வசூல் ஆகி உள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு வசூலான தொகையுடன் ஒப்பிடும் போது 16 புள்ளி 4 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.