விலைவாசி உயர்வு கட்டுப்பாடு உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று நாடு முழுவதும் மாபெரும் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதால், வங்கி அஞ்சல், இன்சூரன்ஸ் உட்பட பல்வேறு முக்கிய துறைகளின் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.