வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகளை தேஜஸ்வி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஆட்சி அமைந்த 20 நாட்களில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற சட்டம் இயற்றப்படும் என்றும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் ஒவ்வொரு தனிநபருக்கும் 25 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்றும், வக்பு திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.