திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பிரம்மோற்சவ விழாவையொட்டி நடைபெற்ற தங்கக்குடை உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில், தங்கக் குடைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு, தேரோடும் வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர், ஏழுமலையான் எழுந்தருளும் தேரின் உச்சியில் கட்டப்பட்டது.