உத்தரபிரதேசத்தில் ஓடும் காரில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலை வாங்கி தருவதாக கூறி சிறுமி மற்றும் அவரது தோழியான 19 வயது பெண்ணை கிரேட்டர் நொய்டாவிலிருந்து, காரில் இளைஞர்கள் அழைத்து சென்றபோது, மதுபோதையில் இளைஞர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காரை விட்டு இறக்கிவிடுமாறு இளம்பெண் வாக்குவாதம் செய்ததில் அவரை காரிலிருந்து இளைஞர்கள் தள்ளிவிட்டனர். இதில் வாகனம் ஏறி இறங்கியதில் பெண் பலியானார் இதனையடுத்து ஓடும் காரில் வைத்தே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.