கோடிக்கணக்கான ரூபாய் மோசடி மற்றும் கையூட்டு வழக்கில் கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ள தொழிலதிபர் கவுதம் அதானியை இன்றே கைது செய்ய வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதை தெரிவித்த அவர், மோடியின் தயவு இருப்பதால் கவுதம் அதானி இந்த அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டினார்.2 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மோசடியில் ஈடுபட்ட கவுதம் அதானி சுதந்திரமாக உலவுவதாக கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி,பிரதமர் மோடி அவரை பாதுகாப்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டினார். இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவின் விதிகளையும் அதானி மீறியது நிரூபணமாகி விட்டதாகவும், அதானியின் ஊழலில் மோடிக்கும் பங்கு இருப்பதாகவும் ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசினார்.