டெல்லியில் காரில் 'லிஃப்ட்' கொடுத்து பயணிகளை ஏமாற்றி நகைகளை பறிக்கும் லிஃபாபா கும்பலை ((Lifafa Gang))சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஹரி நகர் காவல் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் பெண் ஒருவர் அளித்த புகாரில், தனது நகை கொள்ளையடிக்கப்பட்டு போலி நகைகள் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இது தொடர்பாக தீவிர தேடுதலில் அந்த கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த போலி நகைகள் மற்றும் போலி பதிவெண் கொண்ட நெம்பர் பிளேட் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.