இந்தியாவில் சிறுபான்மை மக்கள் மீதான வன்முறை அதிகரித்து வருவதாக மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் குற்றம் சாட்டிய நிலையில், அரசியல் சார்பு நிலை கொண்ட ஆணையத்தின் அறிக்கையை நிராகரிப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் பதிலடி தந்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜெய்ஸ்வால், இந்தியா பற்றிய உண்மைகளை அமெரிக்க ஆணையம் திரித்து கூறி வதந்தி பரப்புவதாகவும், முதலில் மனித உரிமை மீறல் பிரச்னையில் அமெரிக்கா கவனம் கொள்ளட்டும் எனவும் காட்டமாக தெரிவித்தார்.