70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான இலவச சிகிச்சை வழங்கும் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் பயன்பெறும் குடும்பங்களில் உள்ள மூத்த குடிமக்கள் தங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை கூடுதலாக டாப்-அப் காப்பீட்டை பெறுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 4 கோடியே 50 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவார்கள் என்றும், இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு புதிய தனி அட்டை வழங்கப்படும் எனவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.