அமெரிக்காவில் இந்திய மதிப்பில் சுமார் 2 ஆயிரத்து 237 கோடி ரூபாய் அளவுக்கு கையூட்டு மற்றும் மோசடியில் ஈடுபட்டதாக பிரபல இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் அவரது குழும அதிகாரிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.அமெரிக்காவில் இந்திய மதிப்பில் சுமார் 2 ஆயிரத்து 237 கோடி ரூபாய் அளவுக்கு கையூட்டு மற்றும் மோசடியில் ஈடுபட்டதாக பிரபல இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் அவரது குழும அதிகாரிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. நியூ யார்க்கில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், கவுதம் அதானி, பங்கு பத்திர ஊழல் செய்ததாகவும், பங்குசந்தையில் சதி செய்து மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொய்யான மற்றும் திசைதிருப்பும் அறிக்கைகள் வாயிலாக அமெரிக்க முதலீட்டாளர்கள் மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து பணம் திரட்டி அதை இந்திய அரசு அதிகாரிகளுக்கு கையூட்டாக வழங்கி சூரிய மின் திட்டங்களை பெற திட்டமிட்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானி கிரீன் எனர்ஜி லிமிட்டட் மூலம் இந்த முறைகேடு நடந்த தாகவும் கூறப்படுகிறது.