இந்திய பங்குசந்தைகளில் இருந்து 36 நாட்களாக தங்களது முதலீடுகளை திரும்ப பெற்றுக் கொண்டிருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள், கடந்த இரண்டு நாட்களாக, மீண்டும் தங்களது முதலீடுகளை பங்குசந்தையில் முதலீடு செய்ய துவங்கி உள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பங்குசந்தைகளில் வெளிநாட்டு முதலீடுகள் வந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி பெரு வெற்றி பெற்றதும், இந்திய பங்குசந்தைகளில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்க காரணம் என சொல்லப்படுகிறது.