உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் இஸ்லாமிய இளைஞரை ஆடைகளை அவிழ்க்க சொல்லி அடித்ததோடு, ஜெய் ஸ்ரீ ராம் என உச்சரிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிகாப்பட்ட இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், முன்விரோதம் காரணமாக இது போன்ற செயலில் ஈடுபட்ட 3 இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.