கீழடி அகழாய்வு அதிகாரி மாற்றம் குறித்து, மக்களவையில் தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துப் பூர்வ பதில் அளித்துள்ளார். அதில், கீழடி அகழாய்வு இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் மேற்பார்வையில் நடைபெற்று வருவதாகவும், நிர்வாக காரணங்களுக்காகவே அதிகாரிகள் மாறக்கூடும் என்றும், அமர்நாத் ராமகிருஷ்ணாவின் அறிக்கைகள் நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டு இறுதியாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.