இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால், பியாஸ் நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களில் பருவமழை தாமதமாக தொடங்கிய போதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக மண்டி மாவட்டத்தில் உள்ள ஜூனி ((Juni)) மற்றும் பியாஸ்((Beas ))ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதையும் படியுங்கள் : ஜூலை 3 ஆம் தேதி தொடங்கும் அமர்நாத் யாத்திரை..