ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கி வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். ஜெய்பூரில் உள்ள மார்க்கெட், கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகள் மட்டுமில்லாமல் குடிசைப்பகுதிகளும் வெள்ள நீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் சாலைகளில் தேங்கிய வெள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், தற்போது வாகனம் மூலம் வெள்ள நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.