திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, புல்லூர் தடுப்பணை நிரம்பி உபரிநீர் வெளியேறுவதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு- ஆந்திர எல்லைப் பகுதியில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கட்டியுள்ள இந்த தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிந்து தமிழகத்திற்குள் புகுந்த நிலையில், அதற்கு கற்பூரம் ஏற்றி பூஜை செய்து மக்கள் வழிபட்டனர். தொடர் கனமழையால் கர்நாடகாவின் பெத்தமங்கலம் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறுவதால், தமிழகத்தில் பாயும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோரமுள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.