அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த தனது முதற்கட்ட அறிக்கையை மத்திய அரசின் விமான விபத்து விசாரணை அலுவலகம், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் வழங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள விவரங்கள் பொது வெளியில் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும் விசாரணையின் போது கிடைத்த முதற்கட்ட தகவல்கள், விமானத்தின் தரவுகள், விமானிகளின் நடவடிக்கைகள், விபத்து நடந்த போது நிலவிய காலநிலை, மெக்கானிக்கல் குளறுபடிகள் உள்ளிட்டவை குறித்த விவிரங்கள் இந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும், ஆழமான விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு, விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து விமான விபத்து விசாரணை அலுவலகம் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.