வங்கதேச தலைநகர் டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சரக்கு முனையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பல்வேறு விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. சுமார் நான்கரை மணி நேர தாமதத்துக்குப் பிறகு விமானங்கள் புறப்பட்டன.