தேர்தல் பத்திர முறைகேடு தொடர்பாக கர்நாடகாவில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக கோரி டெல்லியில் அவரது இல்லத்தின் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.