வரி வருவாயில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் நிதி பகிர்வாக 1.78 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில், அக்டோபர் மாதம் வழங்க வேண்டிய தொகையுடன் கூடுதல் தவணையாக 89,086 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, உத்தரப் பிரதேசத்துக்கு 31,962 கோடியும், பீஹாருக்கு 17,921 கோடியும், குறைந்தபட்சமாக, கோவாவுக்கு 688 கோடியும், சிக்கிமுக்கு 691 கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு 7,268 கோடியும், ஆந்திராவுக்கு 7,211 கோடியும், கர்நாடகாவுக்கு 6,498 கோடியும் கேரளாவுக்கு 3,430 கோடியும், தெலங்கானாவுக்கு 3,745 கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டுள்ளது.