ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு இறுதி கட்ட தேர்தல் வாக்கெடுப்பு நடக்கும் நிலையில், மாநில அந்தஸ்தை பறித்த பாஜகவுக்கு எதிராக வாக்களிக்குமாறு அங்குள்ள மக்களை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக் கொண்டுள்ளார், தமது எக்ஸ் தள பதிவில், மக்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களின் எதிர்காலத்திற்கானது என அவர் தெரிவித்துள்ளார். இன்று நடக்கும் வாக்குப் பதிவில் மக்கள் பெருவாரியாக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ள கார்கே, மாநில அந்தஸ்தை பறித்தவர்களுக்கு பாடம் புகட்டுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். ஜம்முவில் 24 தொகுதிகள்,காஷ்மீரில் 16 தொகுதிகள் என 40 தொகுதிகளுக்கு நடக்கும் வாக்குப்பதிவில் வாக்களிக்க 39 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர்.