கார், ஜீப், வேன்கள் போன்ற தனியார் வாகனங்களுக்கு FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ் நடைமுறை கொண்டுவரப்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 3,000 ரூபாய் மதிப்பிலான இந்த பாஸ் ஆக்டிவேட் செய்யப்பட்டதில் இருந்து ஓராண்டு அல்லது 200 டிரிப்புகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும். வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் இந்த பாஸ் நடைமுறை அமலுக்கு வருவதாகவும் கட்கரி தெரிவித்துள்ளார்.தேசிய நெடுஞ்சாலைகளில் தாமதமின்றி மக்கள் தனியார் வாகனங்களில் பயணிக்க இந்த நடைமுறை உதவிகரமாக இருக்கும் எனவும் இதற்காக என்று தனி லிங்க் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உள்ளிட்டவற்றில் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்தார். 60 கிலோ மீட்டர் தொலைவுக்குள் சுங்கச்சாவடிகள் இருப்பதாக எழுந்துள்ள புகார்களுக்கு இது ஒரு தீர்வாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.இதையும் படியுங்கள் : போயிங் ட்ரீம்லைனர் - பெரிய அளவில் குறைபாடுகள் இல்லை..