ஹைதராபாத்தில் புஷ்பா 2 திரைப்படத்தை பார்க்க தியேட்டர் முன்பு குவிந்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த நிலையில், அவரது மகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சந்தியா தியேட்டரில் வெளியான புஷ்பா-2 திரைப்படத்தை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.