உத்தரபிரதேச மாநிலம் மகோபா மாவட்டத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சியை பார்த்து பரவசமடைந்த ரசிகர், உற்சாக மிகுதியில் துப்பாக்கியால் சுட்டதில், இரண்டு பெண்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். Goli Chal Javegi என்ற பாடலுக்கு நாட்டுபுறக் கலைஞர்கள் நடனமாடிக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்து எழுந்த அமித் அஹிர்வார் என்பவன் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை எடுத்து காற்றில் சுட்ட நிலையில், ராதா மற்றும் ரமா என்ற இரு பெண்களின் கால்களில் குண்டு பாய்ந்தது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அமித் அஹிர்வாரை தேடி வருகின்றனர்.