பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா தனது 86வது வயதில் காலமானார். நாட்டின் செல்வாக்கு மிக்க நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாடா, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் ஐ.சி.யூ வார்டில் அனுமதிக்கப்பட்டு அங்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.