நீட் தேர்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் முதலிடம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மடிக்கணினிகளை பரிசாக வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். முதலிடம் பிடித்த அவியூர் பகுதியை சேர்ந்த மாணவன் திருமூர்த்தி மற்றும் மூன்றாம் இடம் பிடித்த எஸ்.ஒகையூர் பகுதியை சேர்ந்த மாணவி மதுமிதா ஆகிய இருவரும் சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதேபோல் பத்தாமிடம் பிடித்த சேலம் முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த மாணவன் நிர்மல் என்பவரும் வாழ்த்து பெற்றார்.