உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம், இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் வரும் 15ம் தேதி திறக்கிறது. மும்பை மேற்கு குர்லா பகுதியில். ஆப்பிள் ஸ்டோர் அருகே 4 ஆயிரம் சதுர அடியில் டெஸ்லா நிறுவனத்தின் மையம் அமைக்கப்பட்டுள்ளது. டெஸ்லாவின் ஷாங்காய் தொழிற்சாலையிலிருந்து ஐந்து Y மாடல் வாகனங்கள் ஏற்கனவே மும்பைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாடல் கார்கள் 75 முதல் 85 லட்சம் வரை இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.