டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். இந்த வருட தொடக்கத்தில் வாஷிங்டனில் நிகழ்ந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து மீண்டும் ஆலோசித்ததாகவும், தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகளில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவோம் என உறுதி அளித்ததாகவும் தமது எக்ஸ்தள பக்கத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.