ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இரண்டாவது நாளாக மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூருக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த சண்டை நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. ஆனால் சண்டை நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்ட 3 மணி நேரத்தில் பாகிஸ்தான் அத்துமீறி டிரோன்களை அனுப்பி தாக்கியது. இதேபோல், நேற்றும் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கையாக ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநில எல்லையோர பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.