பீகாரில் வாக்காளர் பட்டியிலில் தீவிர திருத்தம் மேற்கோண்டு வரும் இந்திய தேர்தல் ஆணையத்தை எதிர்த்து என்ஜிஓக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.விளிம்பு நிலை மற்றும் சாதாரண மக்களின் வாக்குரிமையை பறித்து ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக இந்திய தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் அதற்கு உடனே தடை விதிக்க வேண்டும் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டதாகவும் அங்கிருந்து கிடைத்த தகவல் மக்கள் பிரதிநிதிச்சட்டத்தை மீறுவதாக இருப்பதாகவும், சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷண்,. நேகா ரதி ஆகியோர் தெரிவித்தனர். தேர்தல் நடவடிக்கையின் இந்த ஓரவஞ்சனையால் லட்சக்கணக்கான வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை இழப்பார்கள் எனவும் மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.