மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் ஆந்திராவில் நடந்த சுமார் நான்காயிரம் கோடி ரூபாய் வங்கி மோசடி குறித்து விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையினர் இந்த மாநிலங்களில் 503 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கியுள்ளனர்.Corporate Power Limited என்ற நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான வங்கி இருப்பு,மியூச்சுவல் பண்ட்கள், பங்குபத்திரங்கள், நிலங்கள் மற்றும் கட்டட ங்கள் முடக்கிஉள்ளனர். யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் மோசடியான திட்ட அறிக்கைகளை சமர்ப்பித்து 4037 கோடி ரூபாய் கடன் பெற்று அதை வேறு தேவைகளுக்கு பயன்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.