அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து ஜனநாயகத்தை காப்பாற்றும்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்திடம் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார். கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், அரசியல் நோக்கங்களுக்காக மத்திய புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், நீதித்துறை மட்டுமே தங்களின் கடைசி நம்பிக்கை என்பதால், அரசியலமைப்பை பாதுகாக்க நீதிமன்றம் தலையிட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.இதையும் படியுங்கள் : பேருந்து கவிழ்ந்து 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு