பொருளாதார நடவடிக்கைகள் வெளிப்படையானதாகவும், நேர்மையானதாகவும் இருக்க வேண்டியது முக்கியம் என பிரிக்ஸ் அமைப்பு மாநாட்டில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார். அமெரிக்காவின் வரி சுரண்டலுக்கு மத்தியில் காணொலி வாயிலாக நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், சர்வதேச வர்த்தகத்தில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வரும் நிலையில் மிகவும் உறுதியான விநியோக சங்கிலியை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். சர்வதேச வர்த்தகமானது, நியாயமான, சமத்துவமான விதிகளை சார்ந்த அணுகுமுறைகளை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.