அந்தமான் கடலில் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 1.43 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. 20 கிலோ மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டும் அதன் மையப்பகுதி 9.46 டிகிரி அட்சரேகையிலும் 94.07 டிகிரி தீர்க்கரேகையில் அமைந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.