நாட்டின் நம்பர் ஒன் கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் தனது லாபத்தில் 18 சதவிகித இழப்பை சந்தித்துள்ளது. இரண்டாவது காலாண்டில் மாருதி நிறுவனம் சுமார் 3 ஆயிரத்து 800 கோடி ரூபாய் லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலைநில், 3 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மட்டுமே லாபம் கிடைத்துள்ளது. மாருதி நிறுவனத்தின் பங்குகள் கடந்த இரண்டு வருடங்களில் ஆறு சதவிகித வீழ்ச்சியை சந்தித்ததே வருவாய் குறைய முக்கிய காரணம் என கூறப்படுகிறது. காலாண்டு நிகர லாபத்தில் இருந்து அரசுக்கு செலுத்த வேண்டிய வரி நிலுவையான ஆயிரத்து 18 கோடி ரூபாயும் பிடித்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.