நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவின் எக்ஸ் பதிவால் ஓலா நிறுவனத்தின் பங்குகள் 8 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. ஓலா ஸ்கூட்டர்களின் சர்வீஸ் சென்டர் குப்பைகள் போல உள்ளதாக குற்றம் சாட்டி எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்த நடிகர் குணாலுக்கும், ஓலா நிறுவன தலைவர் பவிஷ் அகர்வாலுக்கும் வார்த்தை போர் முட்டிய நிலையில், தற்போது ஓலா நிறுவனத்தின் பங்குகள் 8 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.