இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்திருப்பதாகவும், இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் கச்சா எண்ணெய்யை வாங்குவதற்காக இந்தியா கூடுதலாக அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் நட்பு நாடாக இருக்கும் போதும், இந்தியா விதிக்கும் வரி உலகிலேயே அதிகமானதாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். மிகவும் கடுமையான மற்றும் தொந்தரவான பணமற்ற வர்த்தகத் தடைகள் காரணமாக, பல ஆண்டுகளாக இந்தியாவுடன் மிகவும் குறைவான வர்த்தகத்தை மட்டுமே செய்துள்ளதாக தெரிவித்தார்.