இந்தியாவில் ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 PRO முதல் நாள் விற்பனை கடந்த ஆண்டைவிட 25 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பை மற்றும் டெல்லியில் விடிய, விடிய வாடிக்கையாளர்கள் காத்திருந்து ஐபோன் 16 மற்றும் 16 PRO-வை வாங்கி சென்றனர். இந்தியாவில் மேலும் ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 PRO விற்பனை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.