மைசூரில் நடைபெற உள்ள தசாரா கொண்டாட்டத்தில், ஜம்போ (("jamboo savari")) சவாரியில் பங்கேற்கும் யானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவின் மைசூருவில் தசாரா கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது. இதில் துர்காவின் அவதாரமான சாமுண்டேஸ்வரி தேவியின் "ஜம்போ சவாரி" முக்கிய நிகழ்வாகும்.