மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில், தோழியின் வீட்டிற்குள் புகுந்து செல்போன் மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பெண் டிஎஸ்பி களவாடிய சம்பவம் அதிர வைக்கிறது. செல்போனை சார்ஜில் போட்டுவிட்டு தோழி குளிக்க சென்ற சமயம் பார்த்து வீட்டுக்குள் சென்ற அந்த பெண் போலீஸ், செல்போனையும், பேக்கில் வைத்திருந்த 2 லட்சம் ரூபாயையும் திருடிக்கொண்டு சென்றார். இதனைதொடர்ந்து சிசிடிவியில் அவர் திருடியதை அறிந்துக்கொண்ட தோழி, போலீசாரிடம் புகாரளித்தார். இந்நிலையில், பெண் டிஎஸ்பி வீட்டிலிருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார், பணத்துடன் தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.இதையும் படியுங்கள் : தெருவில் விளையாடிய 3 வயது சிறுமி மீது மோதிய கார்